×

தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட சைபர் காவல் நிலையங்களுக்கு 85 எஸ்ஐக்கள் நியமனம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் மற்றும் நகரங்களில் புதிதாக தொடங்கப்பட்ட சைபர் காவல் நிலையங்களுக்கு 85 உதவி ஆய்வாளர்களை பணி நியமனம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. சைபர் குற்றங்களை தடுக்க மாநகரம் மற்றும் முக்கிய மாவட்டங்களில் மட்டும் சைபர் க்ரைம் பிரிவு இயங்கி வந்தது. தற்போது பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் சைபர் குற்ற புகார்கள் வருவதால் மாவட்டம் மற்றும் நகரங்கள் என தமிழகம் முழுவதும் சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சைபர் க்ரைம் காவல்நிலையங்கள் கூடுதல் டிஜிபி தலைமையில் இயங்கி வருகிறது. சென்னை மாநகர காவல் துறையில் உள்ள 12 மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் சைபர் க்ரைம் காவல் நிலையம் மூலம் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த சைபர் க்ரைம் காவல் நிலையம் மாவட்டம் வாரியாக கண்காணிப்பாளர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தலைமையில் இயங்கும் இந்த காவல் நிலையத்திற்கு காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய 85 உதவி ஆய்வாளர்களை டிஜிபி திரிபாதி தேர்வு செய்து நியமித்து உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவின் தலைமையிடத்திற்கு சென்னை மத்திய குற்றபிரிவில் இருந்த பரிமளா, சென்னை நுண்ணறிவு பிரிவில் இருந்த பிரியா, சேலம் ஆயுதப்படையில் இருந்த பிரேம்குமார், விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் இருந்த  பல்வனானந்தன், விழுப்புரத்தில் இருந்த செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மாவட்டம் மற்றும் நகரங்கள் வாரியாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்கு உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்….

The post தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட சைபர் காவல் நிலையங்களுக்கு 85 எஸ்ஐக்கள் நியமனம்: டிஜிபி திரிபாதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DGP ,Tripathi ,CHENNAI ,
× RELATED கஞ்சா வழக்கு தொடர்பாக உள்துறை செயலர், டிஜிபி பதில் தர ஆணை!!